2 நாளில் ரத்தான திருமணம்.. தன்னை தானே மணந்த பிரபல பாடகி - வைரல் புகைப்படம்!

United States of America Viral Photos Social Media
By Swetha Oct 23, 2024 12:15 PM GMT
Report

பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை தானே திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பிரபல பாடகி  

அமெரிக்கவை சேர்ந்த பிரபல பாடகிதான் பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு கடந்த 2004ம் ஆண்டு தனது நண்பர் ஜேசன் அலெக்சாண்டர் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் 2 நாட்களில் அந்த திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

2 நாளில் ரத்தான திருமணம்.. தன்னை தானே மணந்த பிரபல பாடகி - வைரல் புகைப்படம்! | Britney Spears Did Sologamy Marriage Announced

அதே ஆண்டு நடிகர் கெவின் பெடர்லைனை திருமணம் செய்துக் கொண்டார். அவர்கள் 2007ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். அதன்பின் பிரிட்னி ஸ்பியர்ஸ் 2022ம் ஆண்டு நடிகர் சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொண்டார்.

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்..திடீர் தற்கொலை - இப்படி ஒரு காரணமா?

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்..திடீர் தற்கொலை - இப்படி ஒரு காரணமா?

திருமணம்..

இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில், தற்போது பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

2 நாளில் ரத்தான திருமணம்.. தன்னை தானே மணந்த பிரபல பாடகி - வைரல் புகைப்படம்! | Britney Spears Did Sologamy Marriage Announced

அந்த பதிவில், அதில், இது என்னை நானே திருமணம் செய்து கொண்ட நாள். என் வாழ்வில் நான் செய்த மிகச் சிறந்த காரியம் இது. அதை மீண்டும் கொண்டு வருவது சங்கடமாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ தோன்றலாம். ஆனால் இது நான் செய்த மிகச் சிறந்த காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்.