தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்..திடீர் தற்கொலை - இப்படி ஒரு காரணமா?
தன்னைத் தானே திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்தது அதிர்ச்சி அளித்துள்ளது.
தற்கொலை
துருக்கியை சேர்ந்த இளம் இன்ஸ்டா பிரபலம் தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அண்மை காலமாக டிரண்டாகி வரும் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும்
சோலோகேமி (SOLOGAMY)திருமண முறைப்படி கடந்த வருடம் தான் திருமணம் செய்து கொண்டதாக துருக்கியை சேர்ந்த இன்ஸ்ட்டா பிரபலம் குப்ரா அய்குட் (26) அறிவித்திருந்தார்.
காரணம்?
இந்த நிலையில், நேற்றய தினம் தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து அய்குட் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அப்போது அவர் கடைசியாக இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த வீடியோவில், உடல் எடையை அதிகரிப்பது கடினமாக உள்ளது. நான் மிக விரைவில் எடையை அதிகரித்தே ஆகவேண்டும். ஆனால் தினமும் ஒருகிலோ எடை குறைந்துகொண்டே வருகிறேன் என வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
இப்படி ஒரு சூழலில் அவரது இந்த தற்கொலை முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அய்குட் உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.