ஒரே லாட்டரியில் 6,500 கோடி ரூபாயை அள்ளிய நபர் - நாட்டிலேயே இதுதான்..
நபர் ஒருவர் லாட்டரியில் ரூ 6,500 கோடியை பரிசாக வென்றுள்ளார்.
லாட்டரி
பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு யூரோ மதிப்பில் £177,033,699.20 - அவருக்கு பரிசாக கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் மொத்தமாக 6,500 கோடி பம்பர் பரிசாக லாட்டரியில் வென்றுள்ளார்.
இதன்மூலம், பிரிட்டன் பாடகி டுயா லிபாவை மற்றும் மைக்கேல் புப்லுவை விட பணக்காரர் ஆகியிருக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக இந்த தொகையை வென்று இருக்கும்
கொட்டிய அதிர்ஷ்டம்
அந்த நபர் பண்டிகையை வேற லெவலில் கொண்டாட பிளான் போட்டு இருப்பார் என லாட்டரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகை வெல்வது இது முதல் முறை இல்லை.
முன்னதாக, 2022ல் ஒருவர் 195 மில்லியன் யூரோ ஜாக்பாட் வென்றார். பின் ஜோ மற்றும் ஜெஸ் த்வைட் ஆகியோர் யூரோ 184 மில்லியன் யூரோ வென்றிருந்தார்.
தற்போது, இந்த பணத்தை வென்ற அதிர்ஷ்டசாலியின் விவரம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.