பெங்களூருக்கு ரகசியமாக வந்த மன்னர் சார்லஸ்? என்ன காரணம்!

Bengaluru King Charles III
By Sumathi Oct 30, 2024 02:45 PM GMT
Report

பிரிட்டன் மன்னர் சார்லஸ் சிகிச்சைக்காக பெங்களூரு வந்துள்ளார்.

 மன்னர் சார்லஸ்

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, சிகிச்சைக்காக பெங்களூரு வந்துள்ளனர். இந்த அரச தம்பதிகள் வைட்ஃபீல்டில் உள்ள சவுக்யா சர்வதேச சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

charles visit bengaluru

இந்த வெல்னஸ் மையத்தில் அரச தம்பதியினருக்கு யோகா மற்றும் புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இங்கு அவர்களுக்கு காலையில் யோக பயிற்சி, காலை உணவு பிறகு உடல்நல மேம்பாட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்,

நீங்க குழந்தை பெத்துக்கிட்டா மட்டும் போதும்; அவ்வளவு சலுகை - எங்கு தெரியுமா?

நீங்க குழந்தை பெத்துக்கிட்டா மட்டும் போதும்; அவ்வளவு சலுகை - எங்கு தெரியுமா?

இந்தியா பயணம்

பிறகு மதிய உணவு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஓய்வுக்குப் பிறகு, அரச தம்பதி இரண்டாம் சுற்றில் சில சிகிச்சைகள் பெறுவதாகவும், தியானம், உள்ளிட்டவற்றை மேற்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருக்கு ரகசியமாக வந்த மன்னர் சார்லஸ்? என்ன காரணம்! | British King Charles Secret Visit To Bengaluru

அரச தம்பதியின் வருகையை முன்னிட்டு, மருத்துவ மையத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் பிரட்டனின் புதிய மன்னராக சார்லஸ் பதவியேற்றுக்கொண்ட பிறகு இந்தியாவுக்கு வருகை தந்திருப்பது இது முதல் முறை.

இது தனிப்பட்ட பயணம் என்பதால், அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.