ஊடக சுதந்திரம்: பிபிசிக்கு துணை நிற்போம் - பிரிட்டன் உறுதி
பிபிசிக்கு எப்போதும் துணையாக இருப்போம் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
பிபிசி
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தை மையமாக வைத்து இரு ஆவணப்படங்களை பிபிசி ஊடகம் அண்மையில் வெளியிட்டது இதை திரையிட மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், இந்தியாவில் பிபிசி அலுவலகத்தில் நடைபெற்ற சர்வே குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கேள்வியெழுப்பினர்.
பிரிட்டன் ஆதரவு
தொடர்ந்து, பிரிட்டன் அரசு சார்பில் எம்.பி. டேவிட் ரூட்லி, "பிபிசிக்கு பிரிட்டன் அரசு எப்போதும் துணைநிற்கும். தொடர்ந்து நிதியுதவி வழங்கும். உலக அளவில் பிபிசி இயங்குவது மிகவும் முக்கியமானது என்பதை மறுக்க முடியாது.
பிரிட்டனில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளை பிபிசி விமர்சித்திருக்கிறது. ஊடகங்களுக்கு கருத்து சுதந்திரம் மிகவும் அவசியம். இந்தியாவுடன் பிரிட்டன் நெருங்கிய நட்புறவை கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தை இந்தியாவிடம் பிரிட்டன் அரசு எழுப்பியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.