பிபிசி அலுவலகங்களில் சோதனை ஏன்? : விளக்கம் கொடுத்த வருமான வரித்துறை
பிபிசி டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற வருமானவரி சோதனை இன்று காலை முடிவுக்கு வந்த நிலையில் இந்த சோதனை ஏன் என்பது குறித்து வருமானவரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
பிபிசி வருமான வரித்துறை சோதனை
டெல்லி மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பிபிசி குழும நிறுவனங்கள் கணக்கில் காட்டிய வருவாயும் இந்தியாவில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி ஊழியர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் உரிய நேரத்தில் விவாதிக்கப்படும் என்றும் சில பணப்பரிமாற்றங்களுக்கு வரி செலுத்தப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விளக்கம் கொடுத்த வருமான வரித்துறை
மேலும், வருமான வரித்துறை அளித்த விளக்கத்தில், ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளில் பிபிசி-யின் செயல்பாடுகள் மற்றும் அதற்கு கிடைத்த வருவாய் அளவு ஒத்துப்போகவில்லை. அந்த நிறுவனம் கணக்கில் காட்டிய வருவாயும் இந்தியாவில் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களுடன் நடந்த பரிமாற்றங்களுக்கு கணக்கு காட்டப்படவில்லை. நிறுவனத்தின் ஊழியர்களிடம் இருந்து வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.