2வது முறை; கங்கை ஆற்றில் இடிந்து விழுந்த பிரம்மாண்ட பாலம் - ஷாக் வீடியோ

Viral Video Bihar
By Sumathi Jun 05, 2023 04:15 AM GMT
Report

ஆற்றுக்குள் பாலம் இடிந்து விழும் காட்சிகள் வெளியாகி பரவி வருகிறது.

பிரம்மாண்ட பாலம் 

பீகாரில் கங்கையின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் 200 மீட்டர் நீளம் 2வது முறையாக இடிந்து விழுந்தது. இதில் உயிரிழப்புகள் ஏதுவும் நிகழவில்லை.

2வது முறை; கங்கை ஆற்றில் இடிந்து விழுந்த பிரம்மாண்ட பாலம் - ஷாக் வீடியோ | Bridge Collapses Into River In Bihar Video

ககாரியா மாவட்டத்தில் உள்ள அகுவானியை பாகல்பூரில் உள்ள சுல்தாங்கஞ்ச் உடன் இணைக்கும் 3.1 கிலோமீட்டர் நீளமுள்ள பாலத்தின் கட்டுமானம் 2014 இல் தொடங்கியது.

அதிர்ச்சி வீடியோ

இது, 2019இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பாலத்தின் கட்டுமான காலக்கெடு நான்கு முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது அது நவம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை எஸ்பி சிங்லா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1,710 கோடி செலவில் கட்டுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக ஏப்ரல் 2022 இல், பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக சுல்தாங்கஞ்ச் முனையிலிருந்து தூண்கள் 4 மற்றும் 6 க்கு இடையில் சுமார் 100 அடி மேற்கட்டுமானம் இடிந்து விழுந்தது.