மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் - உ.பி.யில் சத் பூஜையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து...!

Uttar Pradesh Viral Photos
By Nandhini Nov 01, 2022 11:44 AM GMT
Report

உத்தரப்பிரதேசத்தில் சத் பூஜையின் போது, கால்வாயின் மீதிருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத் பூஜையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து

உத்தரப்பிரதேசம், சரய்யா என்ற கிராமத்தில் சத் பூஜை நேற்று நடைபெற்றது. அப்போது, கால்வாயின் மீதிருந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பாலத்தின் மீது நின்றுக்கொண்டிருநத பலர் ஆற்றில் விழுந்தனர். சிலர் பாலத்தின் இடிபாடுகளில் சிக்கினார். இடிபாடுகளில் சிக்கிய மக்களை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டனர்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும், எந்தவித உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் குஜராத்தில் உள்ள மோர்பி என்ற நகரில் கேபிள்கள் பாலம் இடிந்து விழுந்து 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது உ.பி.யில் சத் பூஜையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.    

uttar-pradesh-saraiya-village-chhathpuja