புல்லட்டில் கெத்து காட்டிய மணப்பெண் - வைரலாகும் வீடியோ
மணப்பெண் ஒருவர் அவரது கல்யாண நாளன்று புல்லட் ஓட்டிச்சென்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
dream wedding
கல்யாணம் என்பது ஒருவரது வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம். அத்தகைய நாளை அமைத்துக்கொடுப்பதற்கென்று உலகம் முழுவதும் குழுக்கள் உள்ளன. மணப்பெண் மற்றும் மணமகனின் ஆசைக்கேற்ப அவர்களின் "dream wedding" அவரது உறவினர்கள் மற்றும் வெட்டிங் குழுக்கள் அமைத்துக்கொடுக்கின்றன.
அப்படித்தான் ஒரு மணப்பெண் ஆசை அவரது கல்யாணத்தன்று புல்லட் ஓட்டி செல்லவேண்டும் என்பது. அந்த மணப்பெண் அவரது கல்யாணத்தன்று royal enfield வண்டியில் அழகு நிலையத்திற்கு புல்லட்டில் சென்று பின் மண்டபத்திற்கு செல்லவேண்டும் என்பது அவரது ஆசை.
புல்லட் ஆசை
அதை போன்றே அவர் அழகு நிலையத்திற்கு அதிக எடை உடைய ஆடையான "லெஹன்காவும், துப்பட்டாவும்" அணிந்து இருந்தார். அந்த உடையின் எடை பற்றி அவர் சிறிதும் பொருட்படுத்தவில்லை.
அந்த வீடியோவில் அவர் இன்னொருவரிடம் அவருடைய ஆடையை சரி செய்து விட கூறியுள்ளார். ஆடை சரியாக இருப்பதை உறுதி படுத்திகொண்டு பின்னர் அவர் புல்லட்டில் அழகுநிலையம் வரை சென்று பின் மண்டபத்திற்கு சென்றார்.
அவரது வீடியோவில், "பிடிவாதம் பிடித்த மணமகள், நான் புல்லட்டை ஓட்ட மட்டுமே விரும்புகிறேன்" என்று இந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி 1 மில்லியன் பார்வைகளை கடந்து வருகிறது.