550 சவரன் நகைகளை அபேஸ் செய்த மாடல் அழகி...ஸ்கெட்ச் போட்டு கொடுத்த புல்லட் காதலன்!
550 சவரன் நகை ஏமாற்றிய மாடல் அழகி வழக்கு விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆசை நாயகி
சென்னை, பூந்தமல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர்(40). இவர் தனது சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைகளை திருடி அவருடைய கள்ளக்காதலிக்கு கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சேகரின் மனைவி பிரிந்து சென்ற பிறகு, சேகருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
550 சவரன் நகை
இருவரும் ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வதோடு வெளியூர் வரை சென்று சுற்றியுள்ளனர். மேலும் வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் ஸ்வாதியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் 30 லட்சம் வரை செலவு செய்து கார் ஒன்றும் வாங்கிக் கொடுத்துள்ளார்.சுவாதிக்கு ஏற்கனவே , திருமணம் ஆகியதை மறைத்து சேகரை காதலித்து வருவதை போல் நடித்து வந்துள்ளார்.
டுகாட்டி பைக்
சேகரிடம் பணம் மட்டும் நகைகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பெற்று வந்துள்ளார். மேலும், அவரிடம் இருந்து வாங்கிய நகைகளை விற்று ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தியுள்ளார்.
தொடர்ந்து, சுவாதிக்கு பக்கபலமாக இருந்து நகைகளை பறிக்க திட்டம் தீட்டி கொடுத்தது அவரது காதலன் என தெரியவந்தது. சேகர் கொடுத்த பணத்தில் ரூ10 லட்சம் மதிப்பிலான டுகாட்டி பைக் ஒன்றை வாங்கியதும் தெரியவந்தது.
3 காதலிகளுடன் உல்லாசம்
அதேபோல், இருவரும் சுற்றுவதற்கு புல்லட் பைக் ஒன்றையும் சுவாதி காதலனுக்கு வாங்கி கொடுத்துள்ளார். இதையடுத்து இரு பைக்குகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். சுவாதி சேகரிடம் இருந்து செய்த நகைகளை புல்லட் காதலன் பூந்தமல்லியில் உள்ள கடைகளில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.
சேகரிடம் இருந்து சுவாதி வாங்கிக் கொடுத்த நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தில் காதலன் தனது 3 காதலிகளுடன் ஜாலியாக சுற்றியுள்ளார். இவர்களிடம் இருந்து பணத்தை மீட்க போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.