மணமேடையில் தோழியிடம் மாப்பிள்ளையை செய்த செயல் - மணமகள் ஷாக்!
மணமேடையில் மாப்பிள்ளை மணப்பெண் தோழிக்கு மாலை போட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
மாப்பிள்ளை செயல்
திருமண நிகழ்வின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில்மண மேடையில் மணமகனும் மணமகளும், மணமகளின் தோழியும் நின்றுகொண்டிருக்கின்றனர்.

மாலை மாற்றும் சடங்குக்கு அனைவரும் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. தொடர்ந்து, மணமகள் தன் முன் நிற்கும் மணமகனின் கழுத்தில் மாலை போட்டு விட்டார்.
வைரல் வீடியோ
மணமகன் மணமகளுக்கு மாலை அணிவிக்க வேண்டிய தருணத்தில் மாலையை எடுத்து அதை மணமகளின் கழுத்தில் போடுவதற்கு பதிலாக, அவரது தோழியின் கழுத்தில் போட்டுவிடுகிறார். இந்த செயலைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
கையில் தட்டுடன் நின்றுகொண்டுருந்த மணமகளின் தோழிக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை. இதனை மணமகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.