கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை - விளம்பரத்தால் அதிர்ச்சி

COVID-19 Marriage
By Sumathi Jun 05, 2025 10:59 AM GMT
Report

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்ற விளம்பரம் கவனம் பெற்றுள்ளது.

மணமகள் தேவை

இன்றைய காலக்கட்டத்தில் மேட்ரிமோனிகள், திருமண தகவல் மையம், பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்று விளம்பரப்படுத்தும் நடைமுறை உள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை - விளம்பரத்தால் அதிர்ச்சி | Bride Needed Not Been Vaccinated Ad Viral

இதற்காக வரன்களின் வயது, நிறம், கல்வித் தகுதி, சமூகம் என்ற சுயவிவரக் குறிப்பை வழங்குவதுதான் வழக்கம். ஆனால் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மணமகள் தேவை என்ற விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண் - காலில் விழுந்து மன்னிப்பு கோரிய வீடியோ!

ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண் - காலில் விழுந்து மன்னிப்பு கோரிய வீடியோ!

வித்தியாச விளம்பரம்

அதில், கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்த படித்த வசதியான வரனுக்கு அதே இனத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்று தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை - விளம்பரத்தால் அதிர்ச்சி | Bride Needed Not Been Vaccinated Ad Viral

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை குவித்து வருகின்றனர்.