3 நாளில் திருமணம் - கர்ப்பமான நிலையில் மணப்பெண் விபரீத முடிவு!
மணப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பமான மணப்பெண்
திருவாரூர், நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்- ஜெயந்தி தம்பதியினர். இவர்களின் மகள் சுஷ்மிதா(21). மேப்பலம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார்(27) திருவாரூரில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில், சுஷ்மிதா கர்ப்பமாக இருந்துள்ளார்.
அதனையடுத்து, இருவர் வீட்டாரும் கலந்து பேசியதையடுத்து சுஷ்மிதா ரமேஷ்குமார் வீட்டில் சேர்ந்து வசித்து வந்துள்ளார். தொடர்ந்து திருமணம் நடத்த முடிவெடுத்துள்ளனர். அதற்காக சுஷ்மிதா வீட்டார் துணிகள் எடுப்பதற்காக வெளியே சென்றுள்ளனர்.
தற்கொலை
இந்நிலையில், அவர் வீட்டின் பின்பக்கம் இருந்த கூரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.