முதலிரவு முடிந்த 2 நாளில் குழந்தை பெற்ற இளம்பெண் -திருமணத்திற்கு பின் என்ன நடந்தது?
திருமணமான சில தினங்களில் இளம்பெண் ஒருவர் குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இளம் ஜோடிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் பிரம்மாண்டமாகத் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து 2 நாட்களில் இளம்பெண்ணுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இளம்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாகியிருப்பதாகவும், உடனடியாக அவர் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.
மேலும் அவரது கணவரிடம், படிவங்களில் கையெழுத்து பெற்றுச் சென்றனர். பின்னர் 2 மணி நேரத்தில் குழந்தை பிறந்துள்ளது.இந்த சம்பவத்தால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.அதன்பிறகு, மணமகன் குடும்பத்தினர் மணமகளின் தாயாரிடம் சண்டைப் போட்டுள்ளார்.
இளம்பெண்
அப்போது இந்த சம்பவத்திற்குக் காரணம் மணமகன் தான் கூறியுள்ளார். அதாவது திருமணத்திற்குமுன் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசியுள்ளனர் என்று கூறினர். ஆனால் இதற்கு மணமகன் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் திருமணத்திற்குச் செய்த செலவுகள் ,பொருள்கள் மற்றும் வந்த பரிசுகள் அனைத்தையும் தங்களிடம் ஒப்படைக்கும்படி கூறியுள்ளார்.அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும் என்றும் மணமகள் வீட்டாரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து கிராம பஞ்சாயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.