அபுதாபியில் வேலைக்கு சென்ற பெண்ணுக்கு மரண தண்டனை -விசாரணையில் நடந்தது என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெண்
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷாகிதி கான் (வயது 33) கடந்த 2021 ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சென்றார். அங்குள்ள ஒரு வீட்டில் குழந்தை பராமரிப்பாளராக வேலை வந்துள்ளார். இந்த சூழலில் 2022 டிசம்பர் 7ம் தேதி குழந்தைக்கு வழக்கமான தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஆனால் அன்றைய தினமே மாலை குழந்தை உயிரிழந்தது.மேலும் ஷாகிதி கான் தான் குழந்தை கொலை செய்துவிட்டதாக அந்த குழந்தையில் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஷாகிதி கான் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஷாகிதி கானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஷாகிதி கானின் தந்தை வெளியுறவுத்துறைக்குப் பல முறை மனு கொடுத்துள்ளார்.
மரண தண்டனை
இந்த சூழலில் கடந்த 14ம் தேதி ஷாகிதி கான் அவரது தந்தைக்கு செல்போன் மூலம் தொடர்புகொண்டு ஓரிரு நாட்களில் தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளது. தான் தற்பொழுது எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை எனக் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனையடுத்து ஷாகிதி கானின் தந்தை டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால் ஷாகிதி கானை காப்பாற்ற முடியவில்லை. அவரின் இறுதிச்சடங்கு 5ம் தேதி நடைபெற உள்ளது.