திருமண மேடையில் மாப்பிள்ளைக்கு அடி, உதை - முன்னாள் காதலனின் வீடியோ வைரல்!
இளைஞர் ஒருவர் மணமகனை கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
காதலன் தாக்குதல்
ராஜஸ்தான், பில்வாராவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. அதில், திருமண மேடையில் பரிசு வழங்குவது போல, மணகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்போது, மணமகனை மணமகளும், அவளது உறவினர்களும் பாதுகாக்க முயற்சிக்கின்றனர். அதன்பின் தான், தாக்குதல் நடத்தியது மணமகளின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்தது.
அதிர்ச்சி வீடியோ
அவரை திருமணத்திற்கு வந்தவர்கள் பிடிக்க முயற்சித்த போது, அவர் தப்பியோடிவிட்டார். இதனை அங்குள்ள ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
शादी के स्टेज पर दूल्हे को मारे चाटे
— Kamaldeep journalist (@Kamalde07609489) May 20, 2024
Ex बॉयफ्रेंड और दुल्हन एक ही स्कूल में टीचर थे
भीलवाड़ा राजस्थान की घटना बताई जा रही है... pic.twitter.com/HXI9Ene1HM
தொடர்ந்து வைரலான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது மணமகன் மீது தாக்குதல் நடத்திய ஷங்கர் லால் பாரதி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.