காதல் திருமணம் செய்த இளைஞர் - கொடூரமான தண்டனையை அளித்த பெண்ணின் வீட்டார்
டெல்லியில் சம்மதம் இல்லாமல் திருமணம் முடித்ததால் ஆத்திரம் அடைந்த மணமகள் குடும்பத்தினர் மணமகனுக்கு கொடூரமான தண்டனையை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் சாகர்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞரும், பெண்ணும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு பதிவுத் திருமணம் நடந்திருக்கிறது. இதற்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ரஜவ்ரி பூங்கா காவல் நிலையத்தில் திருமணம் தொடர்பான தகவல்களை அளிக்க தம்பதிகள் சென்றுள்ளனர். அவர்களுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்த மணமகளின் உறவினர்கள் மணமகனை தூக்கிச் சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் மணமகனின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உச்சகட்டமாக மணமகனின் ஆணுறுப்பை மணமகளின் குடும்பத்தினர் துண்டித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது மணமகன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் தொடர்பாக ரஜவ்ரி பூங்கா போலீசார் கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.