திருமணம் முடிந்து 4லே நாளில்.. புதுப்பெண் செய்த காரியம் - துடிதுடித்துப்போன மாபிள்ளை!
திருமணம் முடிந்த நாலு நாளில் இளம்பெண் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள நெடுங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் பெண் (24). இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளை தேடி வந்தனர்.
அதன்படி, இளம்பெண்ணை சென்னை வண்டலூரை சேர்ந்த வாலிபர் குடும்பத்துடன் வந்து திருமணத்துக்காக பெண் பார்த்து சென்றார்.அவர்களிடம் பெண் வீட்டார் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தார்கள். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தது. அதன்படி திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு இருவீட்டாரும் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு வழங்கினார்கள்
புதுப்பெண்
அதன் பின்னர் சீரும் சிறப்புமாக டிசம்பர் மாதம் தொடக்கத்தில் சேத்துப்பட்டு அருகே படவேடு கோவிலில் இருவீட்டார் முன்னிலையில் அந்த ஜோடிக்கு திருமணமும் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே பெண் கேட்டு வந்த சென்னை வண்டலூரை சேர்ந்த இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணமான அந்த புதுப்பெண் வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவர் புதுப்பெண்ணை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். உடனே எதுப் பற்றியும் யோசிக்காமல் புதுப்பெண் தனது கணவர் கட்டிய தாலியை கழற்றி வீசிவிட்டு சென்னை வாலிபருடன் காரில் சென்று விட்டார்.
இதுகுறித்து பெண்ணின் தாயார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சூழலில், திருமணமான 4 நாளில் தாலியை கழற்றிவீசிவிட்டு சென்னை வாலிபருடன் புதுப்பெண் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.