நிச்சயதார்த்தத்தில் மயங்கி உயிரிழந்த 22 வயது மணப்பெண் - நடனமாடியதில் துயரம்

Uttar Pradesh Heart Attack Marriage Death
By Sumathi May 06, 2025 05:41 AM GMT
Report

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடனமாடிய மணப்பெண் மயங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடனமாடிய மணப்பெண்

உத்தரபிரதேசம், நூர்பூர் பினானு கிராமத்தை சேர்ந்தவர் தீஷா(22). இவருக்குஷிவ்புரி கிராமத்தை சேர்ந்த சவுரப் என்ற இளைஞருடன் திருமணம் நடைபெறவிருந்தது.

நிச்சயதார்த்தத்தில் மயங்கி உயிரிழந்த 22 வயது மணப்பெண் - நடனமாடியதில் துயரம் | Bride Dies Before Wedding Heart Attack While Dance

இதனை முன்னிட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சி இரவில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, தீக்ஷா தனது சகோதரிகளுடன் நடனமாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென தீக்ஷாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

திருப்பதியில் இலவசமாக திருமணம் நடத்தலாம் - எப்படி தெரியுமா?

திருப்பதியில் இலவசமாக திருமணம் நடத்தலாம் - எப்படி தெரியுமா?

மாரடைப்பால் உயிரிழப்பு

இதனால் உடனே அவர் ஓய்வெடுக்க செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் வெளியே வராததால், உறவினர்கள் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அங்கு தீக்ஷா மெத்தையின் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

நிச்சயதார்த்தத்தில் மயங்கி உயிரிழந்த 22 வயது மணப்பெண் - நடனமாடியதில் துயரம் | Bride Dies Before Wedding Heart Attack While Dance

தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக தீக்ஷாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்கவில்லை. மேலும், உடலை பிரேத பரிசோதனை செய்யவும் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

நடனமாடிய 22 வயது இளம்பெண் இவ்வாறு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.