ஜல்லிக்கட்டு காளையை கல்யாண சீராக கொண்டுச் சென்ற மணமகள் - மதுரையை அதிரவைத்த சம்பவம்!

Madurai Marriage
By Sumathi May 24, 2023 04:27 AM GMT
Report

ஜல்லிக்கட்டு காளையை மணமகள் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

மதுரை, அய்யங்கோட்டையைச் சேர்ந்த மணமகள் சிவப்பிரியா என்பவருக்கும், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணமகன் ராஜபாண்டிக்கும் திருமணம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு காளையை கல்யாண சீராக கொண்டுச் சென்ற மணமகள் - மதுரையை அதிரவைத்த சம்பவம்! | Bride Carry Jallikattu Bull Husband House Madurai

மணமகள் பொதுப் பணித்துறையில் பணியாற்றி வருகிறார். மேலும், ஜல்லிக்கட்டு காளையையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு திருமண சீருடன் தான் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையையும் மணமகள் புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்றார்.

சீராக காளை

முன்னதாக, காளையை மணமேடையில் ஏற்றி மணமகனுக்கு அறிமுகம் செய்தார். தொடர்ந்து மணமகனும், மணமகளும் ஜல்லிக்கட்டு காளைக்கு முத்தமிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

ஜல்லிக்கட்டு காளையை கல்யாண சீராக கொண்டுச் சென்ற மணமகள் - மதுரையை அதிரவைத்த சம்பவம்! | Bride Carry Jallikattu Bull Husband House Madurai

இந்தச் சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.