மணப்பெண்ணுக்கு வந்த அந்த ஒரு போன் கால் - மணமேடையில் நின்ற திருமணம்

Karnataka Marriage
By Sumathi May 24, 2025 07:10 AM GMT
Report

மணப்பெண்ணுக்கு வந்த போன் காலால் திருமணம் நின்றுள்ளது.

காதலன் போன் கால்

கர்நாடகா, ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால்(28). அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பூவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பல்லவி(24). முதுகலை பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்தார்.

மணப்பெண்ணுக்கு வந்த அந்த ஒரு போன் கால் - மணமேடையில் நின்ற திருமணம் | Bride Call Off Wedding For Lover Phone Call

இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு முதுகலை பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்தார். அதர்காக மண்டபத்தில் உறவினர்கள் கூடியிருந்தனர். தொடர்ந்து மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். அப்போது போனுடன் அறைக்குள் சென்று, கதவை தாழிட்டு கொண்டார்.

தாலி கட்டிய சில நிமிடங்களில் உயிரிழந்த மணமகன் - சோகத்தில் முடிந்த திருமணம்

தாலி கட்டிய சில நிமிடங்களில் உயிரிழந்த மணமகன் - சோகத்தில் முடிந்த திருமணம்

நின்ற திருமணம்

சில நிமிடங்களில் வெளியே வந்த அவர், எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விசாரித்ததில், வேறு ஒரு நபரை காதலிப்பதாக கூறி, அறைக்குள் சென்று விட்டார்.

மணப்பெண்ணுக்கு வந்த அந்த ஒரு போன் கால் - மணமேடையில் நின்ற திருமணம் | Bride Call Off Wedding For Lover Phone Call

உடனே தகவலின் பேரில், போலீசார் வந்து பேசியும், மணமகள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. மேலும், மண்டபத்தை விட்டும் வெளியேறியுள்ளார். பின் இரண்டு குடும்பத்தினரும் மண்டபத்தை காலி செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.