கோலிக்கு வயசாகிடுச்சு; இதை அவரால் பண்ணவே முடியாது - பிரையன் லாரா ஓபன்டாக்
விராட் கோலி குறித்த பிரையான் லாரா கருத்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விராட் கோலி
சச்சின் டெண்டுல்கரின் 50 ஒருநாள் போட்டி சதங்கள் அடித்த சாதனையை சமீபத்தில் விராட் கோலி முறியடித்தார். தொடர்ந்து, அவரது 100 சர்வதேச சதம் அடித்த சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியுமா? என்ற கேள்விகள் இருந்து வருகிறது.
இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஜாம்பவான் பிரையன் லாரா கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 51 சதம் அடித்துள்ளார். அதைத் தொடர் விராட் கோலிக்கு இன்னும் 22 சதங்கள் வேண்டும். டெஸ்ட் போட்டி என்று இல்லாமல் ஒட்டு மொத்தமாக சர்வதேச அளவில் 100 சதம் அடிக்க வேண்டும் என்றால் விராட் கோலிக்கு இன்னும் 20 சதங்கள் வேண்டும்.
பிரையான் லாரா கருத்து
அந்த 20 சதங்களை கோலி அடிப்பது மிகவும் கடினம் கோலிக்கு இப்போது என்ன வயது? 35 இல்லையா? அவர் 80 சதம் அடித்துள்ளார். இன்னும் 20 அடிக்க வேண்டும். அவர் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து சதம் அடித்தால் கூட சச்சின் சாதனையை தொட அவருக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் வேண்டும்.
அப்போது கோலிக்கு 39 வயது ஆகி விடும். இது கடினமான வேலை. ஆனால், இதை யாராலும் உறுதியாக கூற முடியாது. கோலி, சச்சினின் 100 சதம் அடித்த சாதனையை முறியடித்து விடுவார் என கூறுபவர்கள் கிரிக்கெட்டின் லாஜிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
20 சதம் என்பது மிக அதிக தூரத்தில் உள்ளது. பல கிரிக்கெட் வீரர்கள் தங்களின் மொத்த கிரிக்கெட் வாழ்விலும் 20 சதம் அடிக்க மாட்டார்கள். அதனால், நான் கோலி அதை செய்வார் என கூற மாட்டேன். எனது வாழ்த்துகள் கோலிக்கு எப்போதும் உண்டு. சச்சின் டெண்டுல்கரை போல் அவரும் 100 சதங்கள் அடித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். சச்சின் ஒரு அன்பான நண்பர், நான் முன்பு கூறியது போல், நான் கோலியின் தீவிர ரசிகன்."எனத் தெரிவித்துள்ளார்.