புற்றுநோய் அபாயத்தை முன்கூட்டியே கணித்திடலாம்; வெறும் இதனை ஆண்டுகளில்? அசத்தும் ஏஐ மாடல்!
புற்றுநோய் அபாயத்தை முன்கூட்டியே கணித்துவிடும் ஏஐ மாடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்
கடந்த 2021 ஆம் ஆண்டு மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தின் CSAIL மற்றும் ஜமீல் மருத்துவமனை சார்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, மார்பக புற்றுநோய் அபாயத்தை கணிக்கும் மமோகிராஃபி சார்ந்த மாடல்கள் குறித்த தகவல்களை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது தான் இதற்கு காரணம் ஆகும். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
ஒருவேளை இது கச்சிதமாக இருப்பின், ஏஐ நாம் கற்பனை செய்தது மற்றும் ஏற்கனவே கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
ஏஐ மாடல்
இதைத் தான் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மற்றும் ஜமீல் கிளினிக் ஃபார் மெஷின் லெர்னிங்-ஐ சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் உருவாக்கி இருக்கும் டீப் லெர்னிங் சிஸ்டம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பாதிப்பை வெறும் எக்ஸ்-ரே அல்லது மாமோகிராம் பரிசோதனை மூலமாகவே கணித்துவிடுமாம்.
மிராய் (MIRAI) என அழைக்கப்படும் புது ஏஐ சிஸ்டம் நோயாளிகளின் உடல்நிலை விவரங்களை கொண்டு எதிர்கால மாற்றங்களை கணிக்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஏஐ சிஸ்டத்தை ஆய்வாளர்கள் மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையின் சுமார் 2 லட்சம் நோயாளிகளிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.
Artificial intelligence detects breast cancer 5 years before it develops#MedEd #MedTwitter #SCIENCE #technology #oncology #Cancer #Diagnosis pic.twitter.com/XLKu0lpjKd
— Science News (@SciencNews) July 27, 2024