எதுவும் சரியாக இல்லை...இனி மும்பை இந்தியன்ஸூக்கு விளையாட மாட்டேன் - ரோகித் ஓபன் டாக் !
இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டேன் என ரோகித் சர்மா பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் லீக் போட்டி நடக்க இருக்கின்றது.
இந்த நிலையில் ,மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கும் அபிஷேக் நாயரை ந்தித்து ரோகித் சர்மா உரையாடினார். அப்போது இந்த சீசனுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட மாட்டேன் என ஓபனாக பேசியுள்ளார்.
ரோகித் ஓபன் டாக்
அந்த உரையாடல் விடியோவை கொல்கத்தா அணி தனது இணையத்தளப் பக்கத்தில் வெளியிட்டது. அடித்த சில மணி நேரங்களில் அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டது. இருப்பினும், சமூக வலைத்தளத்தில் ரோகித் சர்மா அபிஷேக் நாயருடன் பேசும் வீடியோ தீயாய் பரவி வைரலாகிவிட்டது.
அந்த பதிவில் அபிஷேக் நாயருடன் ரோகித் பேசும்போது, " மும்பை இந்தியன்ஸ் சூழல் இப்போது தலைகீழாக மாறிவிட்டது. எதுவும் சரியாக இல்லை. அதற்கு முழு காரணம் அவர்களே தான். நான் இந்த அணிக்கு வருவதை கோயில் போல் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் எல்லாம் மாற்றிவிட்டார்கள்.
இதுதான் என்னுடைய கடைசி சீசன்" பேசியுள்ளார். இது அவர்கள் அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உரையாடல் என்றாலும், கொல்கத்தா அணி இதனை கவனிக்காமல் இணையத்தில் பதிவேற்றியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா வெளியேறுவது இப்போது உறுயாகிவிட்டது.