9 மனைவியுடன் Time Table போட்டு ஜாலி பண்ணும் பிரபலம் - 10வதுக்கு ஸ்கெட்ச்!
9 மனைவிகளுடன் தனது வாழ்க்கை முறை குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
9 மனைவி
பிரேசிலைச் சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ. இவர் மாடலாக உள்ளார். இவர் 9 பெண்களை திருமணம் செய்துள்ளார். தற்போது, ஒருவரை விவாகரத்து செய்ய உள்ளதாகவும், 10 மனைவிகள் வரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மனைவிகள் அனைவரும் ஒற்றுமை வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அதில் விரிசல் விழுந்துள்ளது. விரைவில், அவரின் மனைவிகளுள் ஒருவரான அகதா என்பவரை விவாகரத்து செய்ய உள்ளதாக ஆர்தர் முடிவெடுத்துள்ளார்.
10 மனைவிக்கு ஆசை
இதுகுறித்து பேசிய ஆர்தர், அகதாவின் தேவைகள் அவரது மற்ற மனைவிகளுடனான உறவில் சிக்கல்களை ஏற்படுத்தியது. எனது மற்ற மனைவிகள் அகதாவின் அணுகுமுறை தவறானது என்று நினைக்கிறார்கள். மேலும் அவர் ஒருவித சாகசதிற்காகவே திருமணம் செய்து கொண்டார் என்றும்

உண்மையான உணர்வுகளுக்காக அல்ல என்றும் மற்ற மனைவிகள் நினைக்கின்றனர். மேலும், எனக்கு ஒரு கற்பனை உண்டு; எப்பவுமே பத்து திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தைதான் உள்ளது.
இருந்தாலும் எல்லா மனைவிகளுடனும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. அனைவரின் மீது ஒரே அளவான அன்புதான் வைத்துள்ளேன். அதனால், ஓரீருவருடன் மட்டும் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அநீதியானதாக தோன்றுகிறது" என்று கூறியுள்ளார்.