பெற்ற 9 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை - திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்
திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த 36 வயது கொண்ட கூலித்தொழிலாளிக்கு ஒரு மனைவியும், 9 வயது மகளும் உள்ளனர். கணவன் தினமும் குடித்து விட்டு மனைவி அடிப்பதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.
இதனால், இவர்கள் இருவருக்கும் தினமும் சண்டை வந்துள்ளது. இந்நிலையில், குடித்து வந்த தந்தை, தனது ஒன்பது வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி, கணவர் மீது லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் மாலதி, கூலித் தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். இதனையடுத்து, போலீசார் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்.