தலையில் இறங்கிய புல்லட்; 4 நாள்கள் தெரியாமல் இருந்த இளைஞர் - கடைசியில் ட்விஸ்ட்!

Brazil
By Sumathi Jan 24, 2024 07:09 AM GMT
Report

தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, தெரியாமல் இருந்த இளைஞர் குறித்த செய்தி வைரலாகி வருகிறது.

தலையில் புல்லட்

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மேடியஸ் ஃபேசியோ(21). மருத்துவம் பயின்றுவரும் இவர், ஜெனிரோ கடற்கரையில் தனது நண்பர்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

Mateus Facio-21

அப்போது திடீரென ஃபேசியோவின் தலையில் ஏதோ தாக்கியதைப்போல உணர்ந்துள்ளார். தொடர்ந்து, ரத்தமும் கொட்டியுள்ளது. இதனால், வலியில் துடித்த அவர் கல்லால் யாரோ விளையாட்டிற்கு அடித்திருப்பதாக நினைத்து ரத்தம் வந்த இடத்தில் சில ஐஸ் கட்டிகளை மட்டும் வைத்துவிட்டு, மீண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவில் தலை தூக்கிய துப்பாக்கி கலாச்சாரம் : முடிவுரை எழுதும் ஜோ பைடன் ?

அமெரிக்காவில் தலை தூக்கிய துப்பாக்கி கலாச்சாரம் : முடிவுரை எழுதும் ஜோ பைடன் ?

கண்டுக்காத இளைஞர்

அதன்பின், 4 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்புகையில் ஒரு கையில் மிகக் கடுமையான வலியை உணர்ந்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்ததில் அவருடைய தலையில், துப்பாக்கிக் குண்டு இருப்பது தெரியவந்துள்ளது. உடனே, மருத்துவர்கள் சுமார் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 9 மி.மீ துப்பாக்கிக் குண்டை அகற்றியுள்ளனர்.

தற்போது உடல் நிலை சீரடைந்து வருகிறது. எடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஃபேசியோ, “நான் கல்தான் தாக்கியிருக்கும் என்று நினைத்தேன். காரணம், அப்போது துப்பாக்கிச் சத்தம் எதுவும் என் காதில் கேட்கவில்லை.

அதனால் யாரோ தன்மீது கல் எறிந்ததாக நினைத்தேன். இப்படி நினைக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், அன்று அந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூடு எதுவும் நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.