மிகவும் அன்பாக இருந்தார்; அதான் விவாகரத்து செய்தேன் - கால்பந்து வீரர் முன்னாள் மனைவி!

Football Brazil Divorce
By Swetha Apr 15, 2024 07:44 AM GMT
Report

அவர் மிகவும் அன்பாக கவனித்து கொண்டதால் விவாகரத்து செய்ததாக பிரபல கால்பந்து வீரரின் முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.

கால்பந்து வீரர் 

பிரேசில் நாட்டை சேர்ந்த ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சாண்டோஸ் லெய்டே பிரபல கால்பந்து வீரர் ஆவார். இவரை ரசிகர்கள் காகா என்று அழைப்பதுண்டு. கடந்த 2002ம் ஆண்டு பிரேசில் உலகக்கோப்பையை வென்ற கால்பந்து அணியில் காகா இடம்பெற்றிருந்தார். பின்னர் 2017ம் ஆண்டு காகா கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

மிகவும் அன்பாக இருந்தார்; அதான் விவாகரத்து செய்தேன் - கால்பந்து வீரர் முன்னாள் மனைவி! | Brazil Star Kakas Ex Wife Reason For Divorce

இதற்கிடையில், கடந்த 2005ம் ஆண்டு காகா தனது தோழியும் காதலியுமான கரோலின் சிலிகோவை மணமுடித்தார். இருவரும் 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் 2015ம் ஆண்டு இந்த தம்பதி பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்திற்கு பிறகு, பிரேசில் மாடல் அழகி கரோலினா டையாஸ் என்பவரை திருமணம் செய்தார்.

பாதி சொத்தை ஜீவனாம்சம் கேட்ட மனைவி - அதிரடி ட்விஸ்ட் கொடுத்த கால்பந்து வீரர்!

பாதி சொத்தை ஜீவனாம்சம் கேட்ட மனைவி - அதிரடி ட்விஸ்ட் கொடுத்த கால்பந்து வீரர்!

முன்னாள் மனைவி காரணம்

அதேபோல, கரோலின் சிலிகோ கடந்த 2021ம் ஆண்டு இடூர்டொ ஸ்கார்பா ஜூலியோ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், தனது முன்னாள் கணவர் காகா மற்றும் விவாகரத்து குறித்து கரோலின் சிலிகோ கருத்து தெரிவித்துள்ளார்.

மிகவும் அன்பாக இருந்தார்; அதான் விவாகரத்து செய்தேன் - கால்பந்து வீரர் முன்னாள் மனைவி! | Brazil Star Kakas Ex Wife Reason For Divorce

அப்போது அவர் பேசுகையில், 'காகா எனக்கு ஒருபோதும் துரோகம் செய்யவில்லை. அவர் என்னை அன்பாக கவனித்துக்கொண்டார், அவர் எனக்கு சிறந்த குடும்பத்தை அளித்தார். ஆனால்,எனக்கு மகிழ்ச்சியில்லை. ஏதோ ஒரு குறை இருந்தது. பிரச்சினை என்னவென்றால் எனக்கு காகா மிகவும் சரியானவராக இருந்தார். அதனால் விவாகரத்து செய்தென்' என்று தெரிவித்துள்ளார்.