நடுரோட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் - பதற வைக்கும் வீடியோ
பிரேசிலில் சிறிய ரக விமானம் பரபரப்பான சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிரேசில் விமானம்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில் நாட்டின் சவோ பாலோ நகரில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று போர்டோ அலெக்ரே நகருக்கு வெள்ளிக்கிழமை(07.02.2025) காலை புறப்பட்டது.
இந்த விமானத்தில் விமானி குஸ்டாவோ கார்னிரோ மெடிரோஸ் (44) , விமான உரிமையாளர் ஆகிய இருவரும் பயணம் செய்தனர்.
இருவர் பலி
விமானம் தனியார் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாவ் பாலோ நகரத்திற்கு அருகே உள்ள பார்ரா ஃபண்டா பகுதியில் பறக்கும் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து பரபரப்பான சாலையில் விழுந்தது.
சாலையின் நடுவே விழுந்த விமானம், தீ பற்றி எரிந்து, கரும்புகையை கக்கியவாறு சறுக்கி சென்றது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தின் பின்பகுதியில் மோதியதில் ஒரு பெண் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். சாலையில் பயணித்த சிலர் லேசான காயமடைந்துள்ளனர். இதில் விமானத்தில் பயணித்த இருவரும் உயிரிழந்தனர்.
New footage of the Plane Crash in São Paulo Brazil, as the Aircraft went down crashing into a bus just after takeoff, killing the pilot and co-pilot and injuring 6 others including 1 woman on the bus and a person on a motorcycle. pic.twitter.com/9QoKjSTHXs
— Moshe (@MosheDe_) February 7, 2025
தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அந்த சாலையில் சிறுது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக பிரேசில் விமானப்படை அறிவித்துள்ளது.