8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் உல்லாசம்... டைம்டேபிள் போட்டு ரொமான்ஸ் செய்யும் பிரபல மாடல்!
பிரபல மாடல் ஒரே நேரத்தில் 9 பெண்களை திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
ஆர்தர் ஓ உர்சோ
பிரபல பிரேசிலிய மாடல் ஆர்தர் ஓ உர்சோ. மிகவும் செல்வாக்கு பெற்றவரான இவர் 2021ம் ஆண்டு 9 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துக் கொண்டார். அந்த நிகழ்வு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் 9 மனைவிகளில் ஒருவர் ஆர்தரை மற்ற பெண்களுடன் பகிர்ந்து கொள்ள மறுத்து விவாகரத்து செய்தார். இந்நிலையில், அனைத்து மனைவிகளுடனும் வாழ்வதற்கு அவர்களுக்காக ஆர்தர் உர்சோ 7500 சதுர அடியில் ஒரு ஆடம்பரமான அரண்மனையைக் கட்டுகிறார்.
8 மனைவிகளுடன்..
அதற்கு அவர் 'Mansion of Free Love' என்று பெயரிட்டார். இவரது இந்த திருமணங்கள் சட்டப்பூர்வமாக செல்லாது. இருப்பினும், அவர் தனது மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஆனால், ஆர்தர் ஓ உர்சோவின் இந்த வாழ்க்கை முறையைப் பார்த்து பலர் அதிருப்தி அடைந்தனர்.

அதில், ஆர்தரின் வீட்டின் சுவர் ஒன்றில் பேய் என்று யாரோ எழுதியுள்ளனர். மேலும், 'அரக்கக் குடும்பமே, போங்கள், நாங்கள் உங்களை வரவேற்க மாட்டோம்' என்றும் எழுதப்பட்டிருந்தது.
Mansion of Free Love
இதைப் பற்றி ஆர்தர் கூறுகையில், இது சுவரில் எழுதப்பட்ட நாள் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. எங்களுக்கு அமைதி தேவை. காலையில் கட்டுமான குழுவினர் வந்தவுடன் கேட்டை திறந்தபோது சுவரில் யாரோ இப்படி ஒரு செய்தியை எழுதியிருப்பது தெரிய வந்தது என்றார்.
மேலும், அனைத்து மனைவிகளுடனும் நேரம் செலவிடுவதில் சிரமமாக இருப்பதால் டைம்டேபிள் போட்டு குடும்பம் நடத்தி வருகிறார். அட்டவணையின் அடிப்படையில் ஒவ்வொரு மனைவியுடனும் தனது நேரத்தை கழித்து வருகிறார்.
தொடர்ந்து சமூக ஊடகங்களில், ஆக்டிவாக இருக்கும் ஆர்தர் அவ்வப்போது தனது மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.