பசுவுடன் உடலுறவு கொள்ள முயற்சி - ஆணுறையுடன் சடலமாக கிடந்த நபர்
பசு மாட்டுடன் உடலுறவு கொள்ள முயற்சித்த நபர் மாடு மிதித்ததில் உயிரிழந்துள்ளார்.
பாலியல் தொல்லை
பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் தொல்லைக்கு உள்ளாகி வருகின்றனர். அரசாங்கமும் இதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பசு மாடு ஒன்றும் பாலியல் தொல்லைக்கு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவிற்கு அருகில் இருக்கும் சமம்பாயா(Samambaia) என்ற பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மாட்டுப்பண்ணை
அந்த பண்ணையில் வேலை பார்க்கும் ஊழியர்கள், காலையில் முதலில் ஒரு மாட்டின் பாலை கறந்து உரிமையாளருக்கு வழங்கி விட்டுதான் மற்ற மாடுகளுக்கு பால் கறக்க செல்வார்கள்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை(15.01.2025) காலை 5 மணியளவில் 45 வயதான ஊழியர் பால் கறக்க சென்றுள்ளார். ஆனால் உரிமையாளருக்கு பால் வழங்கப்படாத நிலையில், அவரின் சக ஊழியர் காலை 6:35 மணியளவில் பண்ணைக்கு சென்றுள்ளார்.
ஆணுறையுடன் சடலம்
அப்போது வழக்கமாக முதல்மாட்டில் பால் கறக்கும் நபர் சுயநினைவின்றி மாட்டின் அருகே கிடந்துள்ளார். இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக காவல்துறையினரும் மருத்துவர்களும் பண்ணைக்கு விரைந்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் ஆணுறையுடன் சடலமாக கிடந்துள்ளார். பசு மாட்டுடன் பாலியல் உறவு கொள்ள முயற்சித்துள்ளார் என்றும் மாடு உதைத்ததில் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.