வீட்டின் மீது விழுந்த விமானம் - பயணித்த அனைவரும் பலி
விமானம் வீட்டின் மீது மோதியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
தனி விமானம்
பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று சாலொ பாலோ மாகாணத்திற்கு நேற்று(23.12.2024) சென்றுகொண்டிருந்தது.
இந்த விமானம் பிரேசிலை சேர்ந்த தொழிலதிபர் லூயிஸ் கிளாடியோ கலியாசிக்கு(Luiz Claudio Galeazzi) சொந்தமானதாகும். இந்நிலையில் விமானத்தை அவரே இயக்கியுள்ளதோடு, அவரது குடும்பத்தினர் உட்பட பத்து பேர் பயணம் செய்துள்ளனர்.
10 பேர் பலி
இந்த விமானம் சாலொ பாலோ மாகாணம் கிராமடோ நகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த வீடு மீது மோதியது.
கீழே விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்தில் அதில் பயணித்த 10 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். விமானம் விழுந்து நொருங்கியதால் வீடு கடைகளில் இருந்த 17 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.