குரங்கு அம்மையால் அச்சம் - விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..அதிர்ச்சி சம்பவம்!

World Health Organization Brazil Monkeypox ‎Monkeypox virus
By Sumathi Aug 11, 2022 06:00 AM GMT
Report

பிரேசிலில் குரங்கு அம்மை நோயின் மீது பயம் காரணமாக, குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரங்கு அம்மை

உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. பிரேசிலில் இதுவரை 1,700 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

[XQZYR[

இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடியை அறிவித்துள்ளது.

பிரேசில்

இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது ஆகும். இந்த நிலையில் பிரேசிலில் குரங்கு அம்மை நோய் பீதியால் குரங்குகள் அதிக அளவு தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.

குரங்குகளிடம் இருந்து நோய் பரவுகிறது என்கிற தவறான எண்ணத்தில் பிரேசில் மக்கள் குரங்குகளை கொலை செய்து வருகின்றனர். அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ரியோ டீ ஜெனிரோவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குரங்குக்கு விஷம் 

இதே போன்ற சம்பவங்கள் நாட்டின் பிற நகரங்களிலும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே குரங்கு அம்மை நோய் பீதியால் குரங்குகள் கொல்லப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பு மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் இதுப்பற்றி கூறுகையில் "இப்போது நாம் பார்க்கும் நோய் பரவல் மனிதர்களிடையே உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே மக்கள் நிச்சயமாக விலங்குகளைத் தாக்கக்கூடாது" என கூறினார்.