மிரட்டும் குரங்கு அம்மை : வேண்டாம் உடலுறவில் இருந்து தள்ளி இருங்க , எச்சரிக்கும் சுகாதாரத்துறை

‎Monkeypox virus
By Irumporai Jun 02, 2022 12:00 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

குரங்கு அம்மை குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை புதிய வழிநாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக தோன்றியுள்ள குரங்கு அம்மை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது.

மிரட்டும் குரங்கு அம்மை : வேண்டாம் உடலுறவில் இருந்து தள்ளி இருங்க , எச்சரிக்கும் சுகாதாரத்துறை | Monkeypox To Abstain From Sex As Cases Rise

இதனிடையே பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு செலுத்துவதற்காக இங்கிலாந்து சுகாதாரத்துறை தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து பிரிட்டன் சுகாதாரத்துறை புதிய வழிநாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு அறிகுறி கொண்டவர்களும் உடலுறவு கொள்வதை தவிர்க்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புண்கள் குணமாகும் வரையிலோ அல்லது, உடலில் ஏற்பட்ட சிரங்குகள் காயும்வரையிலோ மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.