7 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை; இவ்வளவு உயரமா - வெளியான அதிர்ச்சி காரணம்

Brazil
By Sumathi Feb 04, 2023 06:30 AM GMT
Report

7 கிலோ எடையுடன் கூடிய ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

7 கிலோ எடை

பிரேசிலில் பார்ண்டின்ஸ் பகுதியின் மருத்துவமனையில் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் 7.3 கிலோ எடையுடன் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அங்கர்சன் சாண்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

7 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை; இவ்வளவு உயரமா - வெளியான அதிர்ச்சி காரணம் | Brazil Baby Born With 7 Kg And 2 Feet Tall

தற்போது, பெண் குழந்தை அங்கர்சனும், அவரின் தாயும் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கர்சன் பிறக்கும்போதே அதன் கை அளவிற்கு, 2 அடி உயரத்தில் பிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அங்கர்சன் போன்று அதிக எடையில் பிறக்கும் குழந்தைகளை மேக்ரோசோமியா (கிரேக்க மொழியில் பெரிய உடல் என பொருள்) என அழைக்கப்படுகிறது.

2 அடி உயரம்

அதாவது, 4 கிலோவை தாண்டி பிறக்கும் குழந்தைகளை பொதுவாக மேக்ரோசோமியா என்று மருத்துவ ரீதியில் அழைக்கின்றனர். இந்த குழந்தைகள், சுமார் 12 சதவீத பிறப்பின் காரணமாக வருவதாக கூறப்படுகிறது.

கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களில் (கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த சர்க்கரை நோய்), இதுபோன்ற குழந்தைகளின் பிறப்புகளில் 15 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை வாய்ப்பை அதிகரிக்கிறது என மருத்துவ ரீதியில் தெரிவிக்கப்படுகிறது.