ஓய்வை அறிவித்த CSK ஜாம்பவான் - KKR அணியில் கிடைத்த முக்கிய பதவி
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பிராவோவுக்கு கொல்கத்தா அணி முக்கிய பதவி வழங்கியுள்ளது.
டுவைன் பிராவோ
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ கடந்த 2004-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி விளையாடி வந்தார்.
2018 ஆம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர் உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் விளையாடி வந்தார்.
ஓய்வு
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக ஆடிய பிராவோ சென்னை அணியின் முக்கிய வீரராக வலம் வந்தார். அதிக விக்கெட் எடுப்பவருக்கு வழங்கப்படும் purple cap ஐ 2 முறை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஐபிஎல் போட்டிகளில் 2 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக நேற்று (26-09-24) கடைசி போட்டியில் விளையாடிய நிலையில், தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கொல்கத்தா ஆலோசகர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கெளதம் கம்பீர், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான நிலையில், புதிய ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அணிக்காக சிறப்பாக ஆடி, பவுலிங் ஆலோசகராக செயல்பட்டு வந்த பிராவோ கொல்கத்தா அணிக்கு தாவியது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Say hello to our new Mentor, DJ 'sir champion' Bravo! ?
— KolkataKnightRiders (@KKRiders) September 27, 2024
Welcome to the City of Champions! ?? pic.twitter.com/Kq03t4J4ia
ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் டிவைன் பிராவோ முதல் இடத்தில் உள்ளார். 578 டி20 போட்டிகளில் விளையாடி 630 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.