பிராவோ இறக்கிய இடி; KKR அணியில் முக்கிய பதவி - சிஎஸ்கே ரசிகர்கள் வேதனை!
பிராவோ KKR அணியின் முக்கிய பதவியில் களமிறங்கியுள்ளார்.
டிவைன் பிராவோ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டிவைன் பிராவோ. 2024 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடி வந்தார். இன்று அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் இனி பயிற்சியாளராக பல்வேறு டி20 லீக் அணிகளுடன் பணி புரிவார் என கூறப்பட்டது. எனவே, சிஎஸ்கே அணியின் பவுலிங் ஆலோசகராக தொடர்ந்து பணி புரிவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கைகோர்த்த KKR
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முகாமுக்கு தாவியுள்ளார். அவர் விளையாடி வந்த ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களால் நடத்தப்படும் அணி. அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் பிராவோ உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அதன் முடிவில் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைய ஒப்புக் கொண்டார்.
தற்போது சிஎஸ்கே அணியில் இருந்து அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தாவி இருப்பது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.