இந்த ரத்த வகையா உங்களுக்கு? மூளை பக்கவாதம் வர வாய்ப்பு - ஆய்வு என்ன சொல்கிறது!
மூளை பக்கவாதம் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
மூளை பக்கவாதம்
2022ல் 18-59 வயதுடைய 6 லட்சம் பேரின் தரவுகளை பகுப்பாய்வு செய்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 17,000 பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணு தரவுகளையும் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், 'A' ரத்த வகை உள்ளவர்களுக்கு 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 16% அதிகம். 'O1' ரத்த வகை உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 12% குறைவு. 'A' ரத்த வகை உள்ளவர்களுக்கு விரைவாக ரத்த உறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு தகவல்
ரத்த தட்டுக்கள், ரத்த நாளச் சுவர்களின் அமைப்பு மற்றும் புரதங்களின் செல்வாக்கு காரணமாக ரத்த உறைவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ரத்தக் கட்டிகளால் மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
இருப்பினும், 60 வயதிற்குப் பிறகு இந்த ஆபத்து குறைகிறது. 'A' ரத்த வகை உள்ளவர்கள் அதிக கார்டிசோலை (மன அழுத்த ஹார்மோன்) உற்பத்தி செய்கிறார்கள். இது மன அழுத்தத்தை அதிகரிப்பதற்கும் உடல்நலப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
இந்த ரத்த வகையை உடையவர்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவுப் பழக்கங்களை மாற்றுவதும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.