கர்ப்பிணி பெண்கள் காபி குடிப்பது சிசுவிற்கு ஆபத்தா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Pregnancy Women
By Karthikraja Jan 08, 2025 06:30 PM GMT
Report

கர்ப்பகாலத்தில் பெண்கள் காபி குடிப்பதால் சிசுவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

காபி நுகர்வு

பலரும் காலையில் எழுந்தவுடன் சூடாக ஒரு காபி அருந்திவிட்டுதான் தனது நாளையே தொடங்குவார்கள். அந்த அளவுக்கு காபி நமது கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதே நேரம் பெண்கள் கர்ப்பகாலத்தில் சிசுவின் ஆரோக்கியத்திற்காக பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிப்பார்கள். இந்நிலையில் கர்ப்ப காலத்தில் காபி குடிப்பது கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா தி அமெரிக்கன் காலேஜ் ஆஃப் அப்ஸ்டேட்ரிசியன்ஸ் அண்ட் கைனகாலஜிஸ்ட் ஆய்வு நடத்தியுள்ளது. 

நேரில் பார்க்காமல் பக்கத்து அறையிலிருந்தே பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் - எப்படி சாத்தியம்?

நேரில் பார்க்காமல் பக்கத்து அறையிலிருந்தே பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் - எப்படி சாத்தியம்?

கர்ப்பிணி பெண்கள்

இந்த ஆய்வின் முடிவில் காபி குடிக்கலாம் என கூறியிருந்தாலும் 200 மி.கி அல்லது அதற்கும் குறைவான அளவே அருந்தலாம் என எச்சரித்துள்ளது. கர்ப்ப காலத்தில் தினமும் 200 மி.கி காஃபின் உட்கொள்ளும் பெண்களின் குழந்தையை விட காபியே குடிக்காத பெண்களின் குழந்தைகள் பெரியதாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

கர்ப்பிணி காபி

காஃபின் கருப்பை மற்றும் நஞ்சுக்கொடியில் உள்ள இரத்த நாளங்களை சுருங்கச் செய்வதால் கருவுக்கு இரத்த விநியோகத்தைக் குறைத்து குழந்தையின் வளர்ச்சியைத் தடுப்பதாக கூறப்படுகிறது. அதிகளவிலான காஃபின் நுகர்வு குழந்தை வளர்ச்சியின் போது உடல் பருமன் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

அதே வேளையில் கரு சிதைவு, எடை குறைதல் போன்ற பிரச்சனைகளுக்கு காபி அருந்துவது காரணமில்லை என ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.