மூளையை சாப்பிடும் அமீபா - அதிர வைக்கும் நோய் பாதிப்புக்கு முதல் பலி!
புதிதாக ஒரு நோயால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமீபா
தென்கொரியாவைச் சேர்ந்தவர் 50 வயதான நபர். இவர் நான்கு மாதங்களாக தாய்லாந்தில் தங்கியிருந்து விட்டு கடந்த 10ம் தேதி தென்கொரியா திரும்பியுள்ளார். தொடர்ந்து, அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில், அவருக்கு நாக்லேரியா ஃபாவ்லேரி நோய்க் கிருமி தொற்று இருந்ததை மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய்துள்ளனர். இந்த நோய்க் கிருமியின் தாக்கம் 1937 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்துள்ளது.
தீவிர பாதிப்பு
2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின் படி, இந்தியா, தாய்லாந்து, அமெரிக்கா, சீனா மற்றம் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இந்த நோய்க்கிருமி 381 பேர்களை தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த செல் உயிரி மனித மூளையை முடக்கி திடீர் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது எனக் கூறப்படுகிறது. சுவாசிப்பதன் மூலம் மனித உடலுக்குள் நுழையும் இந்த அமீபா மெல்ல மெல்ல மூளைக்குள் சென்று பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த கிருமியின் பரவல் இருப்பதாக அறியப்படும் பகுதிகளில் ஏரியில் குளிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோடை காலத்தில் இந்த நோய்க் கிருமி எளிதில் தாக்கும் என்றும், தண்ணீர் குடிப்பதால் நோய்க்கிருமி தாக்குதல் ஏற்படாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.