மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம்; இறுதிச்சடங்குக்கு அரசு மரியாதை - முதலமைச்சர்
உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு தானம்
மூளைச்சாவு அடைந்த ஒருவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, உறுப்புகள் செயல் இழந்து தவித்து வருவோருக்கு பொறுத்தப்படுகிறது. இதனை தமிழக அரசின் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் கண்காணித்து,
உடல் உறுப்புகள் தேவைப்படுவோருக்கு உதவி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரசு மரியாதை
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
— M.K.Stalin (@mkstalin) September 23, 2023
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும்…
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்! எனக் குறிப்பிட்டுள்ளார்.