காதலியை நீரில் அழுத்தி கொன்ற இளைஞர் - உடலை நாய் குதறிய கொடூரம்!
குளத்து நீரில் காதலியை அழுத்தி இளைஞர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதலி கர்ப்பம்
ராமநாதபுரம், வாத்தியநேத்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுகி. இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவரை காதலித்து வந்துள்ளார். மாதவன் தஞ்சை, செங்கிப்பட்டியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஊருக்கு வரும்போதெல்லாம் வாசுகியை சந்தித்து வந்துள்ளார்.
இதனால் அவர் கர்ப்பமடைந்துள்ளார். உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை தொந்தரவாக கருதிய மாதவன் அவரது அண்ணனுடன் சேர்ந்து, அயோத்தி பட்டைக்கு செல்லும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குளத்தில் வாசுகியை அழுத்தி கொலை செய்துள்ளார்.
கொலை
மேலும் அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதற்கிடையில், வாசுகியின் பெற்றோர் மகளை காணவில்லை என் போலீஸில் புகாரளித்துள்ளனர். இதனால், தீவிரமாக தேடியபோது தான் குளக்கரையில் மண்டை ஓடுகள் எலும்புகள் கிடந்துள்ளன.
அதனை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், நாய், நரிகள் சடலத்தை இழுத்து தின்று குதறி போட்டு இருக்கலாம். எலும்புகள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன என தெரிய வந்தது. அதனையடுத்து, தடவியல் நிபுணர்கள் எலும்புகளாஇ சேகரித்து உள்ளனர். அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.