காதலியை 111 முறை கத்தியால் குத்திக் கொன்ற காதலன்; விடுதலை செய்த அதிபர் புதின் - ஏன் தெரியுமா?
ரஷ்யாவில் காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றவாளியை விடுதலை செய்துள்ளார் அதிபர் புதின்.
கொலை குற்றவாளி
ரஷ்யாவில் விளாடிஸ்லாவ் கன்யூஸ்-வேரா பெக்டெலோவா இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேரா பெக்டெலோவா தனது காதலன் விளாடிஸ்லாவ் கன்யூஸ் உடனான உறவை முறித்துக்கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த காதலன், வேரா பெக்டெலோவாவை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்துள்ளார். பின்னர் 111 முறை கத்தியால் சரமாரியாகத் தொடர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் விளாடிஸ்லாவ் கன்யூஸுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விடுதலை
இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின், விளாடிஸ்லாவ் கன்யூஸை விடுதலை செய்துள்ளார். ரஷ்ய-உக்ரைன் போரில் ரஷ்யா சார்பாக போரில் ஈடுபட குற்றவாளி விளாடிஸ்லாவ் கன்யூஸ் விருப்பம் தெரிவித்ததை அடுத்து அதிபர் புதின் கருணை அடிப்படையில் அவரை விடுதலை செய்துள்ளார்.
ரஷ்யா சார்பாக உக்ரைன் போரில் குற்றவாளி கலந்துகொள்ளவுள்ளார். மேலும், ரஷ்ய ராணுவ உடையில் கையில் ஆயுதத்துடன் விளாடிஸ்லாவ் கன்யூஸ்இருக்கும் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.