ஹாஸ்பிட்டலில் துடிதுடிக்க காதலியின் கழுத்தை அறுத்த காதலன் - இறுதியில் செய்த பயங்கரம்!
காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு, காதலன் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
திருப்பூரைச் சேர்ந்தவர் சத்யஸ்ரீ (21). அங்குள்ள் தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நரேந்திரன் (25) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்ட நிலையில், மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
படுகொலை
இந்நிலையில், நரேந்திரன், காதலியைப் பார்க்க அவர் பணியாற்றும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போதும் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் ஆத்திரம் அடைந்த காதலன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்தார். அதைத் தொடர்ந்து தன்னுடைய கழுத்தையும் அறுத்துக் கொண்டார்.
அதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சத்யஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.