மனைவி,மகன்,மகள் கழுத்தை ரம்பத்தை கொண்டு அறுத்துக் கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்..!

Tamil Nadu Police
4 வாரங்கள் முன்

சென்னையில் கடன் பிரச்சனையால் மனைவி,மகன்,மகள்,கழுத்தை அறுத்து கொன்று தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும்,அதிர்ச்சியேயும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் இஷ்டசித்தி விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தவர் பிரகாஷ் இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

மனைவி,மகன்,மகள் கழுத்தை ரம்பத்தை கொண்டு அறுத்துக் கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்..! | 4 Members Of The Same Family Commit Suicide

இவருக்கு காயத்திரி(39) என்ற மனைவியும், நித்யஸ்ரீ (13),ஹரி கிருஷ்ணன்(8) என்ற மகனும்,மகளும் உள்ளனர். பிரகாஷ் கடன் பிரச்சனை காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மரம் அறுக்கும் மெஷினை கொண்டு தனது மனைவி,மகள்,மகன் ஆகியோரை கொலை செய்து விட்டு பிரகாஷ் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காயத்திரியின் தந்தை காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது அனைவரும் ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுத்து சடலமாக கிடந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலீசார் விசாரணை செய்தனர்.

மேலும் அவர்களின் வீட்டினை போலீசார் ஆய்வு செய்தனர் அப்போது பிரகாஷ் இறப்பதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

மனைவி,மகன்,மகள் கழுத்தை ரம்பத்தை கொண்டு அறுத்துக் கொன்று தானும் தற்கொலை செய்த கணவன்..! | 4 Members Of The Same Family Commit Suicide

அந்த கடிதத்தில் இது நானும் என் மனைவியும் இணைந்து எடுத்த முடிவு, இந்த செயலுக்கு யாரும் பொறுப்பல்ல என்று எழுதி வைத்துள்ளார்.கடன் தொல்லையால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிகின்றனர்.

இதன் பின்னர் கொலை நடந்த வீட்டை நேரில்பார்வையிட்ட தாம்பரம் காவல் ஆணையர் ரவி பேசுகையில் கடிதம் எழுதி வைத்து விட்டு சுவற்றில் ஒட்டி விட்டு இறந்திருக்கிறார்கள். அதில் ஒன்றாக சேர்ந்து முழுவெடுத்தாகவும் யாரும் காரணமில்லை என குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார்.

கழுத்தை அறுத்து கொலை செய்து கொள்வதற்காக எலக்ட்ரிக் ரம்பத்தை அமேசானில் 19 தேதி வாங்கியுள்ளார். மேலும் அவர்களின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதை ஆய்வுக்கு உட்படுத்தி கடன் தொல்லை, மிரட்டல் இருக்கிறதா என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர் என்றார்.

முதற்கட்ட புலன் விசாரணையில் இரவு 11 மணிக்கு சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் சரியான நேரம் தெரியவரும். மயக்க மருந்துகள் உட்கொண்டு பின்னர் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது.

3.50 லட்சத்திற்கான கடன் பத்திரம் கிடைத்துள்ளது தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம் என கூறினார். தடவியல் துறையினர் ஆய்விற்கு பின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது அவர்கள் மன நல மருத்துவர்களை அனுகி ஆலோசனைகள் பெற வேண்டும் என்கின்றனர் மன நல மருத்துவர்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.