13 வருஷம் பழகினோம்; ஆசிரியை கொலை செய்தது ஏன்? இளைஞர் பகீர் வாக்குமூலம்
ஆசிரியை கொலை செய்தது குறித்து இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆசிரியை கொலை
தஞ்சாவூர், களக்குடியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன்.

இதில் மகள் காவியா(26) அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே ஊரை சேர்ந்தவர் கருணாநிதி என்பவரின் மகன் அஜித்குமார் (29) என்பவரும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர்.
இது காவ்யா பெற்றோருக்கு பிடிக்காமல் அவரை உறவினருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதனை அஜித்குமாரிடம் தெரிவிக்கவே, அவர் ஆத்திரத்தில் சண்டையிட்டு பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டிருந்த காவ்யாவை வழிமறித்து
கத்தியால் தலையில் தாக்கியுள்ளார். இதில் காவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். பின் விசாரணையில், நானும் காவ்யாவும் 13 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம்.
அதிர்ச்சி வாக்குமூலம்
ஆனால் காவ்யா என்னை மறந்துவிட்டு அவரது அத்தை மகனை திருமணம் செய்யபோவதாக என்னிடம் போனில் தெரிவித்தார். நிச்சயதார்த்த புகைப்படங்களை வீடியோ காலிலும் அவர் என்னிடம் காட்டினார். நிச்சயதார்த்த புகைப்படங்களையும் எனது வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைத்தார்.

எனது பெற்றோருக்கு நமது காதல் விவகாரம் பிடிக்கவில்லை. அதனால் என்னுடைய அத்தை மகனுக்கு நிச்சய தார்த்தம் செய்துள்ளனர். அவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளபோகிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை.
இருவரும் பிரிந்துவிடலாம் என் இதனால் ஸ்கூட்டரில் பள்ளி கூடத்துக்கு சென்று கொண்டிருந்த காவ்யாவை வழி மறித்து தகராறு செய்தேன். என்னை மறந்து விட்டு உன்னால் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு எப்படி உனக்கு மனம் வந்தது என்று கேட்டேன்.
அதற்கு காவ்யா சரியாக பதில் அளிக்காததால் எனக்கு ஆத்திரம் தலைக்கே ஏறியது. மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனதை கல்லாக்கிக்கொண்டு காவ்யாவை சரமாறியாக வெட்டிக்கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.