நண்பர்களுடன் சேர்ந்து காதலன் செய்த கொடூரம் - கர்ப்பமான இன்ஸ்டா பிரபலம்!

Attempted Murder Delhi Sexual harassment Crime Death
By Sumathi Oct 27, 2024 08:24 AM GMT
Report

இளம் பெண்ணை, அவரது காதலனே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலி கர்ப்பம்

டெல்லி, நங்லோய் பகுதியைச் சேர்ந்தவர் சோனி(19). இவர், சஞ்சு என்ற முகமது சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இன்ஸ்டா பிரபலமான இவர், அவ்வப்போது தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.

soni - salim

இந்நிலையில் சகோதரியை காணவில்லை என்று சோனியின் சகோதரர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும், அவரின் காதலன் மீது, சோனியின் சகோதரர் சந்தேகம் எழுப்பியுள்ளார். அதன்படி, சோனியுடன் முகமது சலீம் நெருங்கி பழகியதில் அவர் கர்ப்பமானது தெரியவந்தது.

காதலால் நெருக்கம்; 16 வயது சிறுமி கர்ப்பம் - கல்லூரி மாணவனுக்கு வலைவீச்சு!

காதலால் நெருக்கம்; 16 வயது சிறுமி கர்ப்பம் - கல்லூரி மாணவனுக்கு வலைவீச்சு!

காதலன் வெறிச்செயல்

அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததால், தன்னை திருமணம் செய்யும்படி கூறியுள்ளார். அதற்கு, சில நாட்கள் கடந்த பின் திருமணம் செய்வதாக சலீம் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.

நண்பர்களுடன் சேர்ந்து காதலன் செய்த கொடூரம் - கர்ப்பமான இன்ஸ்டா பிரபலம்! | Boyfriend Killed Insta Popular Gir For Pregnancy

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சலீம், நண்பர்களுக்கு போன் செய்து நீண்ட தூரம் பயணம் செய்வதற்காக வாடகைக்கு கார் எடுத்து வர கூறியுள்ளார். உடனே, அதில் சோனி, தனது காதலன் சலீம் மற்றும் அவரின் நண்பர்கள் இருவர் உட்பட மொத்தம் 4 பேர் மதீனா பகுதிக்கு சென்றுள்ளனர்.

தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 4 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அவரை புதைத்துள்ளனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக காதலன் சலீம் மற்றும் அவரின் நண்பர் பங்கஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.