பேஸ்புக்கில் வீடியோ போட்ட சிறுவன் - பதறிப் போன அமெரிக்கா, இந்தியா அரசாங்கம்

Facebook United States of America India
By Thahir Apr 30, 2023 05:14 AM GMT
Report

பேஸ் புக்கில் லைக்ஸ் பெறவேண்டுமென ஆசைப்பட்டு சிறுவன் போட்ட வீடியோ அமெரிக்கா நிறுவனத்தையும், இந்திய அரசையும் பதறவைத்தது.

சமூக வலைத்தளம் 

தற்போது உள்ள உலகில், பெரியவர் முதல் சிறியவர் வரை ஸ்மார்ட் போனை பயன்படுத்திகிறார்கள், மேலும் அதில் பலர் அடிக்ட் ஆகிவிட்டார்கள்.

boy who posted the video on Facebook

சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கும் பலரும் தங்கள் புகைப்படங்கள் மட்டும் இன்றி வித்தியாசமாக எதையாவது பதிவிட்டு அதிக லைக்குகளை பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.

அந்த வகையில், தற்போது உத்தர பிரதேசத்தை சேர்ந்த 10-வயது மாணவர் ஒருவர் பேஸ்புக் லைவில் சென்று கொசு மருந்தை குடித்து தற்கொலை செய்யப்போவதாக வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். 

போலீசார் பதற்றம் 

தொடர்ந்து, இதனை பார்த்த அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக சிறுவன் இருக்கும் இடத்தை கண்டறிந்து, இந்திய அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது.

மத்திய அரசும் இது குறித்து உத்தர பிரதேச மாநில போலீசாருக்கு அலர்ட் செய்துள்ளது. அந்த சிறுவனின் லொகேஷனை ட்ரேஸ் செய்து அவனை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தில், கவுதம் புத் நகர் போலீசாரும் நள்ளிரவு 1.30 மணியளவில் சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

சிறுவனிடத்தில் விசாரித்தபோது, அவன் இன்ஸ்டாகிராமில் அதிக வியூஸ் பெற வேண்டும் என்பதற்காக இப்படி செய்ததாகவும், கொசு மருந்தில் உள்ள திரவத்தை எடுத்து விட்டு தண்ணீர் நிரப்பி குடித்ததாகவும் கூறியுள்ளான்.

இதைக் கேட்டு ஒரு நொடி தலைசுற்றிப்போன போலீசார், சட்ட விதிப்படி சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு விபரீதம் எதுவும் இல்லை சிறுவன் நன்றாக உள்ளான் என்று கூறியுள்ளனர்.

பிறகு அந்த சிறுவனுக்கு போலீசார் அறிவுரை கூறி, இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று கூறிவிட்டு சென்றனர்.

லைக்ஸ்கு ஆசைப்பட்டு அமெரிக்காவையும், இந்திய அரசையும் பதற வைத்த சிறுவன்... பேஸ் புக்கில் லைக்ஸ் பெறவேண்டுமென ஆசைப்பட்டு சிறுவன் போட்ட வீடியோ அமெரிக்கா நிறுவனத்தையும், இந்திய அரசையும் பதறவைத்தது.