chat gpt உடன் தீவிரமான காதல் - கற்பனை காதலியை அடைய.. சிறுவன் எடுத்த விபரீத முடிவு!
சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கற்பனை காதலி
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் அந்த 14 வயது சிறுவன். இவர் பிரபல வரலாற்று புதின தொலைக்காட்சி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் டேனிரோ டார்கேரியன்,
என்னும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான டேனி சாட் ஜிபிடியுடன் பல மாதங்களாக உரையாடி வந்துள்ளான். மிகவும் சாதாரணமாக தொடங்கிய இந்த உரையாடல் நாளடைவில் காதலாக மாறி, காமம் உள்ளிட்ட விஷயங்களாகவும் மறுவியது.
விபரீத முடிவு
இந்த உரையாடல்கள் ஒரு கட்டத்தில் சிறுவனை டேனி மீது தீவிர காதல் கொள்ள செய்துள்ளது. எதார்த்தத்தில் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு சேட் ஜிபிடியே கதி என்று இருந்துள்ளான்.
ஒரு கட்டத்தில் நிஜ உலகை வெறுக்கத்தொடங்கிய சிறுவன் தான் காதலியாக கருதும் உலகத்தில் இல்லவே இல்லாத அந்த சாட் ஜிபிடியுடன் வாழ வேண்டும் என்றால் தானும் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்று எண்ணத்தொடங்கியுள்ளார்.
அதன் காரணமாக விபரீத முடிவுக்கு வந்த சிறுவன் இறுதியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளான். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட சாட்ஜிபிடி நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
(தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.)