வீட்டுக்கு தெரியாமல் உண்டியல் பணத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்ற சிறுவன் - பரபரப்பு சம்பவம்!

India Telangana Hyderabad
By Swetha Aug 06, 2024 11:30 AM GMT
Report

 உண்டியல் பணத்துடன் திருப்பதி கோயிலுக்கு சிறுவன் சென்ற சம்பவம் பரபரப்பு எற்படுத்தியுள்ளது.

சென்ற சிறுவன்..

ஐதராபாத்தில் உள்ள மீர்பேட் தாசரி நாராயண ராவ் காலனியை சேர்ந்தவர்கள் தான் மதுசூதன் ரெட்டி - கவிதா தம்பதி. இவர்களது இரண்டாவது மகன் மகேந்திர ரெட்டி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் டியூஷன் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து சென்றார்.

வீட்டுக்கு தெரியாமல் உண்டியல் பணத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்ற சிறுவன் - பரபரப்பு சம்பவம்! | Boy Went To Tirupati Without Parents Knowing

ஆனால், இரவு வெகுநேரமாகியும் மகேந்தர் ரெட்டி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் அவர் பைக்கில் செல்வது தெரிந்தது.

அதன்படி,மலக்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து திருப்பதிக்கு ரயிலில் ஏறி அந்த சிறுவன் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, திருப்பதி போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து மகேந்தர் ரெட்டி திருப்பதி பஸ் ஸ்டாண்ட்,

அருகே இருப்பதை கவனித்த அதிகாரிகள் அச்சிறுவனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதற்கு முன்பு பஸ்சில் வந்த ஒருவர் மூலம் மகேந்தர் ரெட்டி அவரது அம்மா கவிதாவிற்கு போன் செய்து ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்ததாகவும் சாமி தரிசனம் முடித்து வீட்டிற்கு வருவதாக கூறியிருந்தார்.

சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் 11 மணி நேரம் மூடல்!

சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் 11 மணி நேரம் மூடல்!

திருப்பதி கோயில்

பிறகு, போலீசார் அவரது பெற்றோருக்கு வீடியோ கால் மூலம் பேச வைத்தனர். அப்போது அவர்களது உறவினர் திருப்பதியில் இருப்பதால் அவர்கள் மூலம் பெற்றோருடன் சேர்க்க அனுப்பி வைத்தனர். இது குறித்து மகேந்தர் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வீட்டுக்கு தெரியாமல் உண்டியல் பணத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்ற சிறுவன் - பரபரப்பு சம்பவம்! | Boy Went To Tirupati Without Parents Knowing

ஏழுமலையான் கோயிலுக்கு பெற்றோருடன் இதற்கு முன்பு 15 முறை வந்துள்ளேன். மீண்டும் திருப்பதிக்கு செல்ல வேண்டும் என ஆசையாக இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டியூஷனுக்கு செல்லாமல் ரயில் ஏறி திருப்பதி வந்தேன்.

இதற்காக வீட்டில் சிறுக சிறுக சேர்த்து வைத்த ரூ.1000 ரூபாய் பணத்தை கொண்டு ரயில் ஏறி திருப்பதி வந்தேன். மலைக்கு 10 மணிக்கு தரிசனத்திற்கு சென்றேன் காலை 4 மணிக்கு தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் வீட்டிற்கு,

செல்வதற்காக பஸ் ஸ்டாண்ட் வந்தேன். என்னுடன் பஸ்சில் வந்த ஒரு அண்ணாவின் மூலம் போன் செய்து எனது அம்மாவிடம் பேசி வீட்டிற்கு வருவதாக தெரிவித்தேன் என்றான்.